Nagaratharonline.com
 
"அப்ரூவல்' பெற்ற பிளாட்கள் மட்டுமே பதிவு பத்திரபதிவு அலுவலகத்தில் பின்பற்ற யோசனை  Jan 22, 14
 
சிவகங்கை, காரைக்குடி ஆகிய இடங்களில்,மாவட்ட பத்திரபதிவு அலுவலகங்கள் இயங்குகின்றன. இதன் மூலம், 11 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

10 சதவீதத்தினர் மட்டுமே, நகர்புற ஊரமைப்பு துறையினரின், அனுமதியை பெற்று, பிளாட் அமைத்துள்ளனர். 90 சதவீத பிளாட்கள், அனுமதியின்றி போடப்படுகின்றன.
இது போன்ற, பிளாட்களில் வீடுகட்டுவோர்களுக்கு, எதிர்கால வளர்ச்சிக்கேற்ற இடங்கள் இன்றி, இடநெருக்கடியில், வசிக்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்படும். இதை தவிர்த்து, நகர்புற ஊரமைப்பு துறையினர், அனுமதியுடன் பிளாட்கள் அமைத்து, வீடுகள் கட்டினால் மட்டுமே, எதிர்கால வளர்ச்சிக்கேற்ப, இடங்கள் ஒதுக்கப்பட்டு,குடியிருப்புகளுக்கு மத்தியில், கடை,பூங்கா,ரோடு வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த முடியும்

எனவே, அரசு அங்கீகாரம் பெற்ற, மனைப்பிரிவுகளை மட்டுமே, பத்திரபதிவு அலுவலகங்களில், பதிவு செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட பத்திரபதிவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" அரசு பதிவுத்துறை சட்டப்படி, நகர்புற ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெறும், பிளாட்கள் மட்டுமே,
அப்ரூவல் பிளாட்களாக கணக்கிடப்படும். மற்றபடி, கிராம ஊராட்சி
களில், வழங்கப்பட்டுள்ளதாக கூறும், பிளாட் அப்ரூவல் செல்லுபடியாகாது. இதை தடுக்கும் விதத்தில், அந்தந்த மாவட்ட பத்திர பதிவு அலுவலகங்களில், பதிவான அப்ரூவல், அன் அப்ரூவல் பிளாட்கள் பற்றிய விபரங்களை, அரசு சேகரித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அரசு உரிய அறிவிப்பு வெளியிடும்,'' என்றார்.