Nagaratharonline.com
 
பஸ்சில் அடிபட்டு மான் பலி  Feb 1, 10
 
பாகனேரி : மதகுபட்டி அருகே தனியார் பஸ்சில் அடிபட்டு 2 வயதுள்ள பெண் புள்ளிமான் பலியானது.
மதகுபட்டி - அலவாக்கோட்டை காட்டுப்பகுதிக்குள் பள்ளிமான்கள் அதிகளவு வாழ்கின்றன. நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மதுரையிலிருந்து கல்லல் நோக்கி தனியார் பஸ் சென்றது. மதகுபட்டி அருகே பஸ் சென்றபோது காட்டிற்குள் இருந்து ஓடிவந்த இரண்டரை வயது பெண் மான் மீது பஸ் மோதியது. இதில் இடது தொடைகள் முழுவதும் காயமடைந்த மான் உயிருக்கு போராடிய நிலையில் மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அங்கு இறந்தது.
இது குறித்து வனச்சரகர் பழனிச்சாமிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். சிவகங்கை மாவட்ட வன அலுவலர் சம்பத்லால் குப்தா, விருதுநகர் மண்டல வன பாதுகாவலர் மல்லேஸப்பா ஆலோசனைபடி, மானை கைப்பற்றி ஒக்கூர் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார்.டாக்டர் தங்கமுத்து, பிரேத பரிசோதனை செய்தபின், திருப்புத்தூரில் தீயிட்டு எரித்தனர். ஐந்து மான்கள் பலி: கடந்த ஆண்டு மட்டுமே மங்காட்டுபட்டி, காடனேரி, மதகுபட்டி - திருப்புத்தூர் ரோடுகளில் 5 மான்கள் வரை வாகனங்களில் அடிபட்டும், நாய்கள், வேட்டையாடியும் இறந்துள்ளன.
வனச்சரகர் பழனிச்சாமி கூறியதாவது: பஸ்சில் சிக்கி மான் இறந்ததால், டிரைவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும்,


source :inamalar