|
காரைக்குடி அருகே செட்டிநாடு பப்ளிக் பள்ளி Feb 24, 10 |
|
காரைக்குடி, பிப். 22: அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் செட்டிநாடு பப்ளிக் பள்ளி துவங்கப்படுகிறது என செட்டிநாடு கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ்பி. குமரேசன் தெரிவித்தார்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7-வது வீதியில் திறக்கப்பட்டுள்ள நகர அலுவலகத்தில் திங்கள்கிழமை இந்தப் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்த அறக்கட்டளையில் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தாய்மொழி தமிழாக இருந்தாலும், 4 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளால், ஆங்கிலத்தை சரளமாகப் பேச முடிவதில்லை. ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்,ஆங்கிலத்தை சரளமாகப் பேசுவதைக் காண முடியும்.
எனவேதான், அடிப்படைக் கல்வியில் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேற வேண்டியது அவசியமாகிறது.
காரைக்குடி வட்டாரத்தில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியை உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்..
மாணவர்களுக்கு தெளிவான அடிப்படைக் கல்வி, சுயக் கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக தொலைநோக்குடன் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த முயற்சி, புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சி அடிப்படைலான கல்வி, கணினியையும் நூலகத்தையும் ஆக்கப்பூர்வமாககப் பயன்படுத்துதல் போன்ற கற்பித்தலின் வழிமுறைகளையும் வகுத்துள்ளோம்.
புத்தகச்சுமை தவிர்த்தல், சத்தான உணவு, மேசை நாகரீகம், பேச்சுத்திறன், விளையாட்டுத்திறன், பாடம் சாரா பிற நடவடிக்கைகள் இப் பள்ளியின் சிறப்பு அம்சங்கள். பிப். 25 முதல் 10 தினங்களுக்கு மாணவர் சேர்க்கை சுப்பிரமணியபுரத்தில் உள்ள நகர அலுவலகத்தில் நடைபெறும். எல்.கே.ஜி முதல் 6-ஆம் வகுப்பு வரை முதல் கட்டமாக சேர்க்கை நடைபெறுகிறது என்றார்.
Source: Feb 24- Dinamani |
|
|
|
|
|