|
பஸ்சில் ரூ.30 டிக்கெட் பெற அடையாள அட்டை முக்கியம் Sep 19, 11 |
|
மதுரையில் அரசு டவுன் பஸ்சில் ரூ.30 டிக்கெட் பெற பயணிகள் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும்.சென்னையை அடுத்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் எங்கு வேண்டுமானாலும் செல்ல (காலை 5 முதல் இரவு 10 மணி வரை) ரூ.30 டிக்கெட்டை போக்குவரத்து கழகம் அமல்படுத்தியது. உதாரணத்துக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து திருமங்கலம் வரை செல்ல ரூ.30 டிக்கெட்டை நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
கண்டக்டரிடம் டிக்கெட் பெறலாம்.தற்போது ரூ.30 டிக்கெட் பெற பயணிகள் போட்டோவுடன் கூடிய எதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என, போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத பயணிகள் ரூ.30 டிக்கெட் பெற முடியாமல் சிரமம் அடைகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ""ரூ.30 டிக்கெட் தவறான வழிக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அடையாள அட்டை கேட்கப்படுகிறது,'' என்றார்
source : Dinamalar |
|
|
|
|
|