Nagaratharonline.com
 
அரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி  Sep 20, 11
 
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்கள் ஒளிபரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

சந்தாதாரர்களிடம் இருந்து மாதம் 70 ரூபாய் மட்டுமே கேபிள் டிவி ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இந்தச் சேவையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2.9.2011 அன்று தொடங்கி வைத்தார். முதலில் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பின்னர் கட்டணச் சேனல்களையும் ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் விஜய் டிவி, ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏஎக்ஸ்என், எச்பீஓ, நேஷனல் ஜியாகிரபிக், என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் நவ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணச் சேனல்களும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் மாதம் 70 ரூபாய் கட்டணத்திலேயே மேலே குறிப்பிடப்பட்ட கட்டணச் சேனல்களையும் கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

thatstamil


ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் சன் டிவி சேனல்கள்