Nagaratharonline.com
 
சென்னை சென்ட்ரல்- மதுரை "நான் ஸ்டாப்' எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் துவக்கம்  Sep 21, 11
 
சென்னை- மதுரைக்கு, "இடைநில்லா' தூரந்தோ ரயில், அடுத்த மாதம் முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு மதுரை வரும்.* மதுரையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு வழி, சென்னை சென்ட்ரல் செல்லும்.மதுரையில் இருந்து ஈரோடு வரை, டீசல் இன்ஜினில் இயக்கப்படும். ஈரோட்டில் மின்சார இன்ஜின் மாற்றப்படும். அங்கு இன்ஜின் மாற்ற மட்டுமே நிறுத்தப்படும். பயணிகளை ஏற்றுவதில்லை.

அனைத்து பெட்டிகளும் ஏ.சி., வசதி செய்யப்பட்டுள்ளன. ரயில் முழுவதும் தூங்கும் (சிலிப்பர்) வசதி கொண்டது. ஒரு பெட்டி மட்டும் "எக்சிகியூடிவ் கோச்' ஆக இயக்கப்படும். மற்ற (பகல் நேரம்) தூரந்தோ ரயில்களில் உணவு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ரயிலில் உணவு கட்டணம் இல்லை. மதுரை- சென்னைக்கு கட்டணம் 750; "எக்சிகியூடிவ் கோச்' க்கு 1,000 ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

source : Dinamalar