Nagaratharonline.com
 
சிவகங்கை: இன்று முதல் மின்தடை நேரம் மாற்றம்  Oct 2, 11
 
சிவகங்கை, செப். 30: சிவகங்கை மின் பகிர்மான வட்டப் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர சுழற்சி முறையில் சனிக்கிழமை (அக். 1) முதல் மின்தடை நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது.

மாற்றியமைக்கப்பட்ட மின் தடை நேரம்:

காலை 6 முதல் 8 மணி: மானாமதுரையிலுள்ள சிப்காட் மற்றும் மானாமதுரை நகர், காளையார்கோவில் நகர், புலியடிதம்பம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகம், மடப்புரம், கண்ணங்குடி (தேவகோட்டை), சிவகங்கை நகர், பூவந்தி, நாட்டரசன் கோட்டை.

காலை 8 முதல் 10 மணி: இளையான்குடி நகர், காரைக்குடி அண்ணாநகர், மித்ராவயல், சிங்கம்புணரி தொழிற்சாலை பகுதிகள், திருப்பத்தூர் நகர்.

காலை 10 முதல் நண்பகல் 12 மணி: திருப்புவனம் நகர், சிங்கம்புணரி நகர், ராஜகம்பீரம், கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், அரியக்குடி, செஞ்சை, காரைக்குடியில் உள்ள பழைய பஸ் நிலையப் பகுதிகள், காரைக்குடியில் உள்ள மில் பகுதிகள், மித்ராவயல், நாகாவயல், காரைக்குடியில் உள்ள தொழிற்பேட்டை பகுதிகள், தேவகோட்டை நகர் பகுதிகள்.

நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி: புதுவயல், ஆலங்குடி, பட்டினம்பட்டி, கண்டரமாணிக்கம், மணலூர், வேலாயுதபட்டினம், நெல்முடிகரையில் உள்ள அகரம், கல்லுக்கட்டி, தே.புதுக்கோட்டை, மாங்குளம், கீழப்பிடாவூர், கண்டவராயன்பட்டி, காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம், கல்லல், காரைக்குடியில் உள்ள ஹெச்.டி.சி. பகுதிகள்.

பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி: அரசனூர் டாமின், மதகுபட்டி தொழிற்சாலை பகுதிகள், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மாதவராயன்பட்டி, பள்ளத்தூர், கோட்டையூர், மகிபாலன்பட்டி, தாயமங்களம், கண்ணமங்களம்.

மாலை 4 முதல் 6 மணி: தென்கரை, பிள்ளையார்பட்டி பகுதிகள், கொத்தமங்களம், பெரியகோட்டை, மங்களம், கொந்தகை, பொட்டபாளையம், வேப்பங்குளம், கானாடுகாத்தான் மில் பகுதிகள், செட்டிநாடு பகுதிகள்.

விவசாய மின் இணைப்புகளுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மாலை 6 மணி முதல் இரவு 10 வரை விவசாய பம்பு பயன்படுத்தக்கூடாது.

இருமுனை மின்சார நேரங்களிலும் விவசாய பம்பு செட்டுகள் பயன்படுத்தக் கூடாது.

விவசாய பம்பு செட் பகுதிகளுக்கான மின் விநியோகம் நிறுத்தப்படும் நேர விவரம்:

நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி: எஸ்.புதூர், மேலவண்ணாயிருப்பு உலகம்பட்டி, புழுதிப்பட்டி, ஒக்கூர், ஏரியூர், அலவாக்கோட்டை, அழகமானேரி, திருமலை, மதகுபட்டி, காடனேரி, மறவமங்களம், சாலைக்கிராமம், கொல்லாவயல், வண்டல்.

காலை 6 முதல் 8 மணி: அல்லிநகரம், நயினார்பேட்டை செங்குளம், அரசனூர் திருமாஞ்சோலை, படமாத்தூர் மைக்கேல்பட்டனம், கானூர் இடையமேலூர், மலம்பட்டி, தமறாக்கி, அ.தெக்கூர், திருப்பாச்சேத்தி, கொத்தக்குளம், முறையூர் நெற்குப்பை, சோழபுரம், நாலுகோட்டை.

விவசாய பம்ப் செட்டுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும்.

Source:Dinamani