|
இளையான்குடி தொகுதியை மேம்படுத்த புதிய திட்டங்கள்: சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் Nov 23, 09 |
|
இளையான்குடி தொகுதியை மேம்படுத்த புதிய திட்டங்கள்: சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் எம்எல்ஏ மனு
சிவகங்கை, நவ, 22: இளையான்குடி தொகுதி மேம்பாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் சுப.மதியரசன் எம்எல்ஏ கொடுத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த சட்டப் பேரவை மனுக்கள் குழுத் தலைவர் கோவை தங்கம் எம்.எல்.ஏ.விடம் இளையான்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் (படம்) தனது தொகுயில் உள்ள மக்களின் குறைபாடுகளை களைவதற்கு பல்வேறு கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்தார். கோரிக்கைகள் விவரம்:
இளையான்குடி தொகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வராத ஊர்களை திட்டத்தில் சேர்த்துக்கொள்ள ஆவன செய்யுமாறும், ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேலும் இரண்டு மருத்துவர்களை பணியில் அமர்த்துமாறும்.
கண்மாய்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பக்ர்கள் தங்கிட கட்டடமும், ஒரு பூங்காவும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறும்.
இளையான்குடியில் மாணவர் விடுதி அமைக்கவும், சமத்துவபுரம் அமைக்கவும், சாலைக்கிராமத்தில் உழவர் சந்தை அமைக்கவும், நகரகுடி, அளவிடங்கான் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் இல்லப்பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்கிடவும், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சனவேலிக்கு அருகில் பூவனிகிராமத்தில் அணைக்கட்டு கட்டுமாறும்.
முனைவென்றியில் துணை மின்நிலையம் அமைத்து தருமாறும், இளையான்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல குளிர் சாதன பேருந்து இயக்கிடவும், இளையான்குடி நீதி மன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்கித் தருமாறுóம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Source:Dinamani 23/11/09 |
|
|
|
|
|