|
ரோபோ உதவியுடன் இதய அறுவைச் சிகிச்சை: செட்டிநாடு மருத்துவமனையில் சாதனை Oct 11, 11 |
|
இரு ரத்தக் குழாய்களை மாற்றிப் பொருத்தும் இதய அறுவை சிகிச்சையை ரோபோ உதவியுடன் மேற்கொண்டு செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை செட்டிநாடு ஹெல்த் சிட்டியின் இதய நோய்ப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரவிகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்தனர்.
இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் டாக்டர் ரவிகுமார் கூறியதாவது: இராக்கைச் சேர்ந்த அலி மலாபாஸ் (65), கடந்த 11 ஆண்டுகளாக மூச்சுத் திணறல் மற்றும் உடற் சோர்வால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரத்தக் குழாய் சுருக்கத்தை விரிவுபடுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
÷மீண்டும், இவருக்கு அதே பிரச்னை ஏற்பட்டதுடன், இதயத்துக்குப் போகும் ரத்தக் குழாயிலும் அடைப்பு இருந்தது. இதையடுத்து செப்டம்பர் 21-ம் தேதி, ரோபோ உதவியுடன் இதயத்தின் இரு குழாய்களை மாற்றிப் பொருத்தியதோடு, பைபாஸ் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
÷இதற்கு முன் சிலருக்கு நுரையீரல் ரத்த நாளத்தில் இருந்த அடைப்பை நீக்குதல், இதய இடமாற்று அறுவை சிகிச்சைகளை ரோபோ உதவியுடன் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ÷ஆனால், இந்த நோயாளிக்கு இருவேறு பிரச்னைகள் இருந்ததால், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சவாலானதாக இருந்தது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர்.
source : Dinamani |
|
|
|
|
|