Nagaratharonline.com
 
வாக்குப் பதிவு தினத்தில் விடுமுறை  Oct 11, 11
 
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில், அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் வரும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.