|
போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை கலெக்டர் Oct 13, 11 |
|
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ""உங்கள் விரல் மை, உரிமைகளின் தாய்மை, இதுவே நாட்டின் மேன்மை'' வாருங்கள் வாக்களிப்போம், ""விரல் நுனியில் அடையாளம், பெருமையடைகிறது ஜனநாயகம், அழைக்கிறது ஆணையம்'' அளிப்பீர் உங்கள் வாக்கை உள்ளிட்ட 5 வகையான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்களை அனைத்து மாவட்ட அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டவும், மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் தேர்தல் கமிஷன் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையில் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போஸ்டர்களை மாவட்ட கலெக்டர் ராஜாராமனே அனைத்து அலுவலகங்களுக்கும் நேரடியாக வினியோகம் செய்தார். அலுவலகங்களில் உள்ள நோட்டீஸ் போர்டில் அவரே ஒட்டி வைத்தார். அவர் கூறுகையில், "" பொதுமக்கள் நேர்மையான, தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் ஓட்டுக்கு பணம் வாங்ககூடாது. தேர்தலில் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது,'' என்றார்.
source : Dinamalar |
|
|
|
|
|