|
சிவகங்கை: ஷீல்டு கால்வாயில் பெரியாறு நீர் திறக்க வலியுறுத்தல் Nov 23, 09 |
|
ஷீல்டு கால்வாயில் பெரியாறு நீர் திறக்க வலியுறுத்தல்
சிவகங்கை, நவ,20: ஷீல்டு கால்வாய் சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு குணசேகரன் எம்எல்ஏ மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு நேரடி பாசனக் கால்வாயான ஷீல்டு கால்வாய் சீரமைப்புப் பணிகள் ரூ 5.4 கோடி செலவில் நடைபெறுகின்றன. இந்த கால்வாய் மூலம் 42 கண்மாய்களுக்கு தண்ணீர் நிரம்பும். 1750 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இக் கண்மாய் சீரமைப்புப் பணிகளை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
அவருடன் விவசாய சங்கப் பொறுப்பாளர்கள் என். ரெகுநாதன், என்.லட்சுமணன், எம்.சந்திரன் மற்றும் சீல்டு கால்வாய் பாசன சங்கத் தலைவர் அர்ச்சுனன் ஆகியோரும் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஷீல்டு கால்வாய் பணிகளை விரைவுபடுத்தி பெரியாறு தண்ணீர் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், பெரியாறு பாசன தலைமை பொரியாளர் ஆகியோருக்கு குணசேகரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
Source: Dinamani 23/11/09 |
|
|
|
|
|