|
ஐப்பசி விஷு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு Oct 18, 11 |
|
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஐப்பசி விஷு விழாவுக்காக திங்கள்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி சசி நம்பூதிரி திங்கள்கிழமை மாலை திறந்துவைத்து, மூலஸ்தானத்தில் நெய்விளக்கேற்றி வைத்தார்.
முன்னதாக, 18 படி நடையையும் அவர் திறந்து வைத்தார். தந்திரி கண்டரரு மகேஸ்வரு ஐயப்பனின் தவ அலங்காரத்தைக் களைந்து, அபிஷேகம் செய்தார்.
இருமுடி கட்டிவந்த பக்தர்கள் 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
source : Dinamani |
|
|
|
|
|