Nagaratharonline.com
 
நீதிபதி ஏஆர்.லட்சுமணனின் பணிகளை பாராட்டி நகரத்தார் சமூகநீதிக் காவலர் என்னும் பட்டம்  Oct 28, 11
 
தேவகோட்டையில் கந்தசஷ்டி விழாக் கழகம் சார்பில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.
66-வது ஆண்டு விழாக் கழகத் தலைவரும், மதுரை டால்பின் பள்ளித் தாளாளருமான ஏஆர்.ராமநாதன் தலைமை வகித்தார். இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர்.லட்சுமணன் தொடக்கி வைத்தார். "மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க' என்னும் தலைப்பில் மதுரை ஆதீனம் அருளுரை வழங்கினார்.


தொடர்ந்து நீதிபதி ஏஆர்.லட்சுமணனின் சமூகப் பணி, இலக்கியப் பணி, ஆன்மிகப் பணியைப் பாராட்டி நகரத்தார் சமூகநீதிக் காவலர் என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

source : Dinamani