|
சென்னையில் சீல் வைக்கப்பட்ட விதிமீறிய கடைகள் லிஸ்ட் Oct 31, 11 |
|
சரவணா ஸ்டோர்ஸ் ( பாத்திரக்கடை ) , சென்னைசில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ்( 2 கடைகள் ) , குமரன்சில்க்ஸ்( நகைமாளிகை) , ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ( சேலைகளின் சோலை) , காதிம்ஸ் என மொத்தம் 32 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.
கடைகள் அடைக்கப்பட்டு கிடப்பதால் பணிக்கு வந்த ஊழியர்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றனர். குறிப்பாக கடைகளின் நிர்வாகிகள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வியாபார சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.
இன்று சீல் வைக்கப்பட்ட கடைகளின் சுவரில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது: விதிமுறை மீறல் காரணமாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை கடை உரிமையாளர்களே இடிக்க வேண்டும். இல்லையேல் சி.எம்.டி.ஏ., சார்பில் இடித்து அதற்குரிய செலவு தொகையை வசூலிக்கும் என்றும் இது வரை கடைக்குள் யாரும் நுழையக்கூடாது, மீறுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|