Nagaratharonline.com
 
கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்  Oct 31, 11
 
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் நடந்தது. சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளி, பின்னர் செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு எழுந்தருளினார். சூரசம்ஹார வெகு சிறப்பாக நடைபெற்றது.

குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் நேற்று மதியம் 1.30 மணிக்கு மலையில் இருந்து அடிவாரத்திற்கு வேல் கொண்டு வரப்பட்டு, மாலை 4 மணிக்கு பார்வதி தேவியிடம் "வேல் வாங்கும்' நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.

பழநி, மலைக்கோயிலில் இருந்து சின்ன குமாரசுவாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திருஆவினன்குடி கோயிலுக்கு வேல் கொண்டு செல்லப்பட்டு, தங்க மயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி கத்தி, கேடயம், அம்பு, வில்லுடன் கிரிவீதியில் எழுந்தருளினார். வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கில் பானுகோபன், தெற்கில் சிங்கமுகாசூரன், மேற்கில் சூரபத்மன் வதம் செய்யப்பட்டனர்.