Nagaratharonline.com
 
பெட்ரோல் அளவு குறைவு: 133 பம்ப்புகளுக்கு தடை  Nov 1, 11
 
பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி குறைவான அளவில் பெட்ரோல் விநியோகிக்க காரணமான 133 பம்ப்புகளுக்கு அதிகாரிகள் தாற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.


தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட அளவியல் பிரிவு அதிகாரிகள், தமிழகம் முழுவதும் 2011 ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பல்வேறு பெட்ரோல் நிலையங்களைச் சேர்ந்த 133 பம்ப்புகளில் முறையான அளவைக் காட்டிலும், குறைவான பெட்ரோல் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பம்ப்புகள் அனைத்துக்கும் அதிகாரிகள் தாற்காலிக தடை விதித்தனர்.

இதில் சென்னையில் மட்டும் 31 பம்ப்புகளுக்கு தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

source : Dinamani