|
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ. 5, 6-ல் சிறப்பு முகாம் Nov 2, 11 |
|
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நவம்பர் 5, 6 ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என, ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
1.1.2012-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 24.10.2011 முதல் 8.11.2011 வரை நடைபெறுகிறது.
மேலும், நவம்பர் 5, 6 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். 18 வயது நிரம்பியவர்கள் (31.12.1993-க்குள் பிறந்தவர்கள்) அனைவரும் வாக்காளராக பதிய தகுதியானவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இருப்பிடத்துக்கான ஆதாரம், 18-24 வயதுக்குள் இருப்பவர்களுக்கு பிறப்புச் சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை படிவத்தில் ஒட்டி மற்றொன்றை இணைக்க வேண்டும். மொபைல் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இதுவரை வாக்காளராக சேராதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
source : Dinamani |
|
|
|
|
|