|
பழனி- கந்தசஷ்டி நிறைவு விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலம் Nov 2, 11 |
|
|
|
பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சஷ்டி விழா நிறைவை அடுத்து, மலைக் கோயில் தெற்கு வெளிப் பிரகார மண்டபத்தில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
காலை விநாயகர் அனுமதி, பொற்சுன்னம் இடித்தல், சண்முகர் ஆவாகனம், ஹோமங்கள் வளர்த்தல் ஆகியன நடைபெற்றன. பின்னர், அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
அடுத்ததாக, சுவாமிக்கு பட்டாடைகள், நகைகள், வண்ண மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சோடஷ உபசாரம் நடைபெற்றது.
பின்னர், மேள தாளம் இசைக்க, வேத மந்திரம் முழங்க மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
source : Dinamani |
|
|
|
|
|