Nagaratharonline.com
 
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தனியார் வீடுகளில் நவீன வசதி ஏற்பாடு  Nov 3, 11
 
சுற்றுலா பயணிகளுக்காக சிவகங்கை, புதுக்கோட்டையில் உணவுடன் கூடிய உறைவிட திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு பாரம்பரிய பங்களா, பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, இடைக்காட்டூர் ஆலயத்தை காண ஆண்டிற்கு 15ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். புதுக்கோட்டை சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம், ஆவுடையார்கோவில், குகை ஓவியங்களை காணவும் வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இங்கு தங்கி, சுற்றி பார்க்கவேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள லாட்ஜ்களில் குடும்பத்தினருடன் தங்க போதிய வசதி இல்லை.இப்பிரச்னையை தவிர்க்க, அந்தந்த பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள், தங்களது வீடுகளை வெளிநாட்டுபயணிகள் தங்கும் இடமாக மாற்றுவதோடு, அவர்கள் விரும்பினால் உணவு சமைத்து வழங்கும் பணியையும் செய்யலாம். இதற்கு முன் வந்தால், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும். இதற்காக வீட்டின் உரிமையாளர்கள் ஏ.சி., தொலைபேசி வசதியுடன் கூடிய அறைகளை அமைக்க வேண்டும்.

விரும்புவோர் அந்தந்த மாவட்ட சுற்றுலா அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம், என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

source : Dinamalar