|
ரயில் நிலைய தங்கும் அறைகளுக்கு ஆன்-லைனில் முன்பதிவு Nov 4, 11 |
|
ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைகளுக்கு ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைதூரப் பயணிகளின் வசதிக்காகவும், பயணத்தின்போது ஏற்படும் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், மதுரை, ராமேசுவரம் ஆகிய 3 ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. முன்பதிவு செய்பவர்கள், தங்களது பயண டிக்கெட்டின் பி.என்.ஆர். எண்ணுடன் பதிவுசெய்ய வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவுபோல அறைகளுக்கான முன்பதிவுகளும் 90 நாள்களுக்கு முன்பு தொடங்கும். பயண டிக்கெட்டை ரத்து செய்தால், அறைக்கான முன்பதிவையும் ரத்து செய்து கொள்ள வேண்டும்.
இத்திட்டம் விரைவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
source : Dinamani |
|
|
|
|
|