Nagaratharonline.com
 
NEWS REPORT: KITCHEN TIPS  Nov 4, 11
 
மெழுகுவர்த்திகளை குளிர்ந்த நீரில் வைத்து எரியவிட்டால் அதிக வெளிச்சத்துடன் நீண்ட நேரம் எரியும்.

தேங்காய் உடைக்கும்போது தேங்காய்த் தண்ணீரை சேமித்து, எலுமிச்சைசாறு பிழிந்து, சிறிது தேன் கலந்து, ஜூஸ் குடித்தால் சுவையோ சுவை !.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் வாழை இலை ஓரத்தில் இருக்கும் தண்டினை ஒரு துண்டு நறுக்கி குழம்பில் போட்டால் உப்பு குறைந்துவிடும்.

பிரிட்ஜில் காய்கறிகள் வைக்கும் பகுதியில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து அதில் காய்கறிகளை வைத்தால் அவைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

வாழைத்தண்டை கிள்ளிப்பார்த்து நூல் தெரிந்தால் வாங்கலாம். நார் தெரிந்தால் அது முற்றல் தண்டு.. வாங்க வேண்டாம்.

கருவேப்பிலையை உருவி, ஹாட் பேக்கில் போட்டு, மூடி வைத்தால் வாடாமல் பசுமையாக இருக்கும்.

கோதுமை மாவு சலித்த பிறகு, கப்பியை சபீனாவுடன் சேர்த்து பாத்திரங்களை தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும்.

சர்க்கரை வைக்கும் சம்பட்டத்தின் மூடியை சுற்றி, விளக்கெண்ணை தடவி வைத்தால் எறும்புகள் வராது.

பிரிட்ஜில் வைக்கும் பால், பூ, பழம், காய்கறி வாசனை வராமல் இருக்க சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் வைத்து விட்டால் வாடை போய்விடும்

இட்லி மாவு புளிக்காமல் இருக்க, முழு வெற்றிலையை (காம்பைக் கிள்ளாமல்) மாவில் போட்டு விடுங்கள். நான்கு நாட்கள் ஆனாலும் மாவு புளிக்காது.

தொகுப்பு : P. உமையாள்.

E-mail : umayalperiyakaruppan@yahoo.com