|
"சூப்பர் விசா"வை அறிமுகப்படுத்தியது கனடா Nov 5, 11 |
|
பணிநிமித்தமாக, கனடாவிற்கு சென்று தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கனடா அரசு "சூப்பர் விசா" என்ற பெயரிலான புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, செய்திக்குறிப்பை வெளியிட்டு குடியேறுதல் துறை அமைச்சர் ஜேசன் கென்னி பேசியதாவது,
"பேமிலி கிளாஸ்" களின் நீண்டநாள் கனவான இந்த சூப்பர் விசா தற்போது நனவாகி உள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ள இந்த சூப்பர் விசா, முதற்கட்டமாக, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டதாகவும், பலமுறை சென்றுவரக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் விசாவின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். அதுமட்டுமல்லாது, இந்த விசாவை புதுப்பிக்கும் காலத்தில், 1 ஆண்டு வரை அவர்கள் கனடா நாட்டில் தங்க எவ்வித தடையுமுமில்லை. இந்த விசாவிற்கு விண்ணப்பித்து, 8 வார கால அளவில் சூப்பர் விசாவை பெறக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
source : Dinamalar |
|
|
|
|
|