|
தங்கம் விலை தாறு மாறு... மகா கடுப்பில் பொது ஜனம்! Nov 8, 11 |
|
சென்னை: தங்கத்தின் விலை எல்லை மீறிய வீக்கத்துக்குப் போய்விட்டது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 496 அதிகரித்துள்ளதால், பெரும் ஆத்திரத்தில் உள்ளனர் நகை வாங்கும் சாதாரண பொது மக்கள்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 21 ஆயிரத்து 80 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 496 அதிகரித்தது.
சென்னை மார்க்கெட்டில் ஒரு சவரன் ரூ. 21 ஆயிரத்து 576 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,692-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 57 ஆயிரத்து 485 ஆகவும், ஒரு கிராம் ரூ. 61.45 ஆகவும் உள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு இதுவரை இல்லாத புதிய உயர்வை எட்டியதாலும் (1.1 சதவீத உயர்வு), ஐரோப்பிய நிதி நெருக்கடி காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துவிட்டதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
Source:Oneindia |
|
|
|
|
|