Nagaratharonline.com
 
Can Fin Homes நிறுவனத்தில் Probationary Officer பணி  Nov 10, 11
 
கனரா வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் Can Fin Homes Ltd., நிறுவனத்தில் காலியாக உள்ள புரபேஷனரி அலுவலர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Probationary Officer
காலியிடங்கள்: 40
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, சத்திஷ்கர் ஆகிய 4 பிராந்தியங்களிலுள்ள 24 கிளைகளில் மேற்படி காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரை இயக்கும் அறிவையும் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.11.2011 தேதிப்படி 21-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் கீழ்கண்டவாறு: அண்ணாசாலை - சென்னை, தாம்பரம் - சென்னை, அம்பத்தூர் - சென்னை, பேரூர் - சென்னை, ஒசூர், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, பாண்டிச்சேரி.
சம்பளம்: ரூ 12, 200 - 600/ 10-18,200-700/ 200-19,600 - 800/ 5-23,600
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
நேர்முகத்தேர்வு சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும். இடம், தேதி, நேரம் பற்றிய முழுவிவரமும் www.canfinhomes.com என்ற இணையதளத்தில் 30.11.2011 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பப் படிவம் அடங்கிய கவரின்மேல் ''Application for the Post of Probationary Officer'' என எழுத வேண்டும்.
விண்ணப்படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 21.11.2011


source : Dinamani