Nagaratharonline.com
 
சபரிமலை அய்யப்ப தரிசன சுற்றுலா ரெயில் திட்டம்: சென்னையில் இருந்து சென்று வர ரூ.1,890 கட்டணம் ; IRCTC  Nov 10, 11
 
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த மாதம் 21, 24, டிசம்பர் 1, 5, 15, 19, 22 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் சபரிமலை ரெயில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் சென்னையில் இருந்து செல்லவும், தரிசனம் முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பவும் என 4 நாட்கள் பயணத்துக்கு ரூ.1,890 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தில் உறுதி செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் கோட்டயம்-நிலக்கல்-கோட்டயம் சென்றுவர வாகன வசதி உட்பட்டது. குறைந்த நாட்களில் சிரமம் இல்லாமல் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்து உடனடியாக சென்னை திரும்புவதற்கு வசதியாக இந்த பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு : 044-64594959, 90031-40681