|
செட்டிநாடு பங்களாக்களை காண தடை : வெளிநாட்டினர் ஏமாற்றம் Nov 13, 11 |
|
செட்டிநாடு சுற்றுலா தலங்களில் பாரம்பரிய பங்களாக்களை காண வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிப்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றசிவகங்கை மாவட்டம் காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடியில் பல நூறு ஆண்டுகளை கடந்தும் செட்டிநாடு பாரம்பரிய பங்களாக்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. கட்டட கலைநயமிக்க இந்த பங்களாக்களை காண பிரான்சு, பிரேசில், பிரிட்டன், இத்தாலியில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாரம்பரிய பங்களாக்களை காண ஆவலுடன் செல்கின்றனர். ஆனால், பங்களா உரிமையாளர்கள் வெளிநாட்டு பயணிகளை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், பங்களாக்களின் உட்புற தோற்றத்தை பார்க்கமுடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பிரான்சை சேர்ந்த மரியாஸ் கூறியதாவது:இங்கு பாரம்பரிய பங்களாக்கள் இருப்பதாக, "யுனஸ்கோ மேப்' பில் அறிந்தோம். அதை வைத்து நேரில் பார்வையிட வந்தோம். ஆனால், பங்களா உரிமையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், பங்களாக்களின் வெளிப்புற அழகை மட்டும் பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம், என்றார். செட்டிநாடு பாரம்பரிய நகர் வளர்ச்சி குழு உறுப்பினர் பழனியப்பன் கூறியதாவது: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துவிட்டன. இருந்தாலும், சில பங்களாக்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், அனுமதிக்க வாய்ப்பில்லை. பங்களாக்களை பராமரித்த பின் மீண்டும் அனுமதிக்கலாம், அதற்குபின் சுற்றுலா பயணிகள் கலைநயத்தை பார்க்கலாம் என்றார்,
source : Dinamalar |
|
|
|
|
|