Nagaratharonline.com
 
பராமரிக்கப்படாத தேவகோட்டை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி  Nov 13, 11
 
: 40 ஆண்டுகள் ஆன நிலையில் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரி கட்டடம் பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் நீடிக்கிறது.தேவகோட்டையில் கடந்த 1972ல் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் உள்ளன. சமீபத்தில் மாவட்டத்திலேயே ஒருங்கிணைந்த ஆக்ஸிஜன் செலுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.வசதிகள் இருந்தும் ஆஸ்பத்திரி கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. பொது வார்டு, பெண்கள் சிறப்பு வார்டு ஸ்கேன் அறைகளில் மழை தண்ணீர் வடிந்த வண்ணம் உள்ளது. மழை நீர் வடிவதால் படுக்கைகள் பயன்படுத்த முடியமால் தரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் ஆன நிலையில் கட்டடம் முற்றிலும் சிதைந்து வெள்ளையடிப்பதை தவிர எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் உள்ளது.

மின் வயர் சுவர் வழியே செல்வதால் சுவரை தொட்டாலே ஷாக் அடிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடத்திலும் அனைத்து கதவுகளும் உடைந்து கிடக்கின்றன.மாவட்ட கலெக்டர், சுகாதார துறையினர் நேரில் பார்வையிட்டு கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

source : Dinamalar