Nagaratharonline.com
 
கண்ணீரை வரவழைக்கும் மிளகாய் விலை  Nov 16, 11
 
மிளகாயின் காரத்தால் கண்ணீர் விடாதவர்கள் கூட, மிளகாயின் விலையைக் கேட்டால் கண்ணீர் விடும் அளவுக்கு இப்போது தமிழ்நாட்டில் காய்ந்த மிளகாய் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

சென்னையில் இப்போது ஒரு கிலோ காய்ந்த குண்டு மிளகாய் விலை ரூ.200-ஐ கடந்து, ரூ.220-க்கு விற்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான அமுதம் அங்காடிகளில் கூட ரூ.220-க்குதான் விற்பனை செய்யப்படுகின்றன. நீட்டு மிளகாய் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மிளகாய் விலை ரூ.200-ஐ கடந்து விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை.