Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் குவியும் பக்தர்கள்  Nov 21, 11
 
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கும், பழநி முருகனுக்கும் மாலை அணியும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களின் வசதிக்காக, காலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடையை திறந்து வைக்க, பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இச்சிறப்பு நடை திறப்பு, தைப்பூசம் வரை நீடித்திருக்கும் என, அறங்காவலர்கள் சிதம்பரம் செட்டியார், லெட்சுமணன் செட்டியார் தெரிவித்தனர்.