|
நெற்குப்பை பேரூராட்சி நியமனக் குழு உறுப்பினர் தேர்தல் Nov 24, 11 |
|
திருப்பத்தூர், நவ. 23: சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சி நியமனக் குழு உறுப்பினர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
நியமனக் குழு மற்றும் வரி விதிப்பு, மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் தேர்தல் தலைவர் சஞ்சீவி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ராதாகிருஷ்ண்ன் தேர்தலை நடத்தினார். நியமனக் குழு உறுப்பினராக 3-வது வார்டு உறுப்பினர் பி.இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். வரி மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக 4-வது வார்டு உறுப்பினர் மணிகண்டன், 9-வது வார்டு உறுப்பினர் செ.கணேசன், 7-வது வார்டு உறுப்பினர் பாக்கியலெட்சுமி, 8-வது வார்டு உறுப்பினர் ஷாஜஹான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தி.மு.க.வைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்
SOURCE:dinamani |
|
|
|
|
|