Nagaratharonline.com
 
வீடுகளுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் கிடுகிடு உயர்வு: ரூ.40 லிருந்து 110 ஆகிறது  Nov 28, 11
 
மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்த பின், இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் முதல் அமலாகும்.

மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை, கட்டாயமாக கட்ட வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இதற்கான கட்டணத் தொகைக்கு பரிந்துரை கோரி, மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. வீடுகளுக்கு, தற்போது இரு மாதங்களுக்கு வசூலிக்கப்படும், 40 ரூபாய் கட்டாய கட்டணம், 110 ரூபாயாக மாற்றப்பட உள்ளது.