Nagaratharonline.com
 
காரைக்குடியில் விற்கும் அமெரிக்கன் "பிளம்ஸ்'  Dec 2, 11
 
இதய நோயை குணப்படுத்தும் அமெரிக்க "பிளம்ஸ்' பழ விற்பனை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமோகமாக நடக்கிறது. காரைக்குடி பழக்கடைகளில், தற்போது இதய நோயை குணப்படுத்தக்கூடிய "அமெரிக்க "பிளம்ஸ்' பழ விற்பனை அதிகரித்துள்ளது. மலைப்பிரதேசத்தில் விளையும் இப்பழத்தில் நீர், புரதம், இரும்பு சத்து நிறைந்தவை. இவற்றை சாப்பிட்டு வந்தால், எளிதில் இதயம் சார்ந்த நோய்கள் வராது.

இது குறித்து பழ விற்பனையாளர் எஸ்.பாலு கூறியதாவது: இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கன் "பிளம்ஸ்' சீசன் துவங்கும். இந்த பழம் பல வகை நோய்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது. விபரம் தெரிந்த பலர் இந்த பிளம்ஸ்களை கேட்டு வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.250க்கு விற்கிறது. டாக்டர் ஒருவர் கூறியதாவது: இப்பழங்களில் நீர்ச்சத்து 86, நார்ச்சத்து 5.1, மாவு பொருள் 14, இரும்புச்சத்து.03 மில்லி கிராம் அளவு உண்டு. ரத்த சுத்திகரிப்பு, மலச்சிக்கல் தவிர்ப்பு, மாரடைப்பு, உடல் பருமன் போன்ற நோய்களுக்கு மிகவும் பயனளிக்கும். இதய நோய்க்கு உகந்த மருந்து, என்றார்.

source : Dinamalar