|
பொருள்கள் நிறுத்தப்பட்ட ரேஷன் அட்டைகள் விவரம் நாளை அறிவிப்பு Nov 28, 09 |
|
குடும்ப அட்டை தணிக்கை முடிவில் பொருள் வழங்கல் நிறுத்தப்பட்ட அட்டைகள் பட்டியல், திங்கள்கிழமை அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
வீடுவீடாக குடும்ப அட்டை தணிக்கை நடைபெற்ற போது வீடுகளில் இல்லாதவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் குடும்ப அட்டைகளுக்கு பொருள் வழங்கல் நிறுத்தும் ஆணை வட்ட வழங்கல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்டு, 30.11.2009ல் நியாயவிலைக் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட உள்ளது.
முகவரி மாற்றம் மற்றும் பிற காரணங்களால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அட்டைதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட கடைகளிலேயே படிவங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும். அதனை பூர்த்தி செய்து குடும்ப அட்டை நகல் மற்றும் இருப்பிட ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை நகல், வீட்டு வரி ரசீது நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல், ஓட்டுநர் உரிம நகல், பாஸ்போர்ட் நகல், அஞ்சல் துறை வழங்கும் இருப்பிட அடையாள அட்டை நகல் ஆகியவற்றில் ஒன்றை இணைத்து நியாயவிலைக் கடையிலேயே கொடுத்து அதற்கான ஒப்புதல் சீட்டு பெறவேணடும்.
மேல்முறையீடு மனுக்கள் 31.12.2009க்குள் கொடுக்கப்படவேண்டும். முறையீடு மனு கொடுத்தவர்களுக்கு அவர்களது முறையீடு மனு மீதான இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து பொருள் வழங்கப்படும்.
மனுக்கள் மீது நேரடி விசாரணை செய்து உண்மையில் வசிப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்து கொடுத்து தொடர்ந்து பொருள் வழங்க நடவடிக்கை எடுóககப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : Dinamani 28/11/09 |
|
|
|
|
|