Nagaratharonline.com
 
FREE SMART CARD to cross OMR (Rajiv Gandhi Saalai ..IT High Way) till 15th Dec  Dec 2, 11
 
ராஜிவ்காந்தி சாலை டோல்கேட்களில், கார்கள் கடந்து செல்வதற்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும், "ஸ்மார்ட் கார்டு' என்ற புதிய திட்டம், நேற்று செயல்பட துவங்கியது.

இது குறித்து, டி.என்.ஆர்.டி.சி., மேலாளர் ஜோசப் கூறியதாவது: ராஜிவ்காந்தி சாலையில் காரில் பணிக்கு செல்வோர் ஒரு மாதத்திற்கு, 1,050 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "ஸ்மார்ட் கார்டு' மூலம், மாதம், 800 ரூபாய் செலுத்தினால் போதும். தினமும் இருமுறை என, மாதம் 60 முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக 200 ரூபாய் கொடுத்து "ஸ்மார்ட் கார்டு' பெற வேண்டும். திட்டம் புதிதாக துவங்கியிருப்பதால், வரும் 15ம் தேதி வரை இலவசமாக "ஸ்மார்ட் கார்டு' வழங்குகிறோம். தற்போது, கார்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

source : Dinamalar