Nagaratharonline.com
 
வெளிநாடு பறக்கும் பாரம்பரிய செட்டிநாடு கலை பொருட்கள்  Dec 3, 11
 
காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி, தேவகோட்டை பகுதிகளில் பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்கள் உள்ளன. கலை நயத்துடன் கட்டப்பட்ட இவை நூறாண்டுகளை கடந்தும் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. பிரெஞ்ச் கலைக்கு நிகரான இந்த கட்டட கலை இன்னும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சிறப்பு: வீடுகளில் பயன்படுத்தப்பட்ட கலை பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது தனி சிறப்பு. பர்மா தேக்கு மரம், பெல்ஜியம் கண்ணாடிகள், நிலையை சுற்றி பதிக்க ஜப்பான் கண்ணாடிகள் என அடுக்கி கொண்டே போகலாம்.

பராமரிக்கப்படாமல் பாழடைந்த பங்களாக்களில் இருந்து இப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு கதவு, ஜன்னல், நிலை, உத்திரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கலை பொருட்கள் என தனித்தனியாக விற்கப்படுகின்றன. காரைக்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கலை பொருட்களை வெளிநாடுகளுக்கு வாங்கிச் செல்வது அதிகரித்துள்ளது.

பழைய செட்டிநாடு கலைப்பொட்கள் வியாபாரி வி.ஜெ., முருகேசன் கூறுகையில்,""கடந்த 20 ஆண்டுகளாக செட்டிநாடு பாரம்பரியமிக்க அரிய வகை கலை பொருட்களை சேகரித்து விற்பனை செய்கிறேன். பழைய பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், காரைக்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செட்டிநாடு கலை பொருட்களை விரும்பி வாங்குவர். தவிர, சுற்றுலா துறை மூலம் இப்பொருட்கள் மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.

source : Dinamalar