|
தேவகோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் Dec 4, 11 |
|
தேவகோட்டையில், நூறடி உயரத்தில் கட்டப்பட்ட தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன் செட்டியார் முயற்சியால், சிவலிங்கம் செட்டியார் குடும்பத்தினர், கருதாவூரணி வடகரையில் நூறடி உயரத்தில் தண்டபாணிசுவாமி கோயில் கட்டினர். மூலஸ்தானத்தில் தண்டம் தாங்கிய சுவாமி சிலை, மூன்று அடி உயர வேலுடன் காட்சி அளிக்கிறார்.
இக்கோயில் கும்பாபிஷேகம், டிச.,1ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மீனாட்சி சுந்தர குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று (டிச.,4) பகல் 11.30 மணிக்கு, பிச்சை குருக்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பாதரக்குடி சுவாமிகள், பழனி பாதயாத்திரை குழு தலைவர் பழனியப்பர், ஸ்தபதி சண்முகநாதன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம், ரோட்டரி முன்னாள் தலைவர் வி.ராமநாதன், நிர்வாகி விக்னேஷ், நாச்சியப்பன், அருணாசலம், மாணிக்கம், பாண்டியன், சகுபர்அலி பங்கேற்றனர். சிவலிங்கம் செட்டியார் மகன்கள் ராஜாராம், முத்துக்குமார், லட்சுமிநாராயணன் ஏற்பாடுகளை செய்தனர்.
source : Dinamalar |
|
|
|
|
|