Nagaratharonline.com
 
திருப்பத்தூர் அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப  Dec 4, 11
 
திருப்பத்தூர் அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே கண்டர மாணிக்கம் நடுவிக் கோட்டைக்கும் இடையே தரைப் பாலத்தில் மகிபாலன் பட்டி விருசுழியாற்று தண்ணீரும், திருப்பத்தூர் பெரிய கண்மாய்யில் இருந்து வெளியேறும் தண்ணீரும் கலந்து வருவதால் அதிக அளவு தண்ணீர் வருகிறது. தரைப்பாலத்தில் சுமார் 4 அடி உயரத்தில் தண்ணீர் வருவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வரவேண்டிய 7ஏஅரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து திருகோஷ்டியூர் செல்லும் தனியார் பஸ்சும், 3டி அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நடுவிக் கோட்டை, கண்டர மாணிக்கம், பட்டமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து திருப்பத்தூர் வரும் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையினால் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டி முறையூர் தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

source : Maalaimalar