|
சலுகையில் பத்திரப்பதிவு : சமாதான திட்டம் அறிமுகம் Dec 5, 11 |
|
சிவகங்கை மாவட்டத்தில் நிலம் / வீட்டடி மனை / கட்டடம் உட்பட்ட சொத்துக்களுக்கு சந்தை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிய முத்திரைக் கட்டணம் வசூலித்து பத்திரப்பதிவு செய்வதற்காக சமாதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் படி, ஏற்கனவே செலுத்தப்பட்ட முத்திரை கட்டணத் தொகைக்கும், பத்திரபதிவு அதிகாரி நிர்ணயம் செய்யும் தொகைக்கும் உள்ள வித்தியாசத்தில் மூன்றில் ஒரு பங்கு தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் 2011 நவ.1 முதல் 2012 ஜனவரி 31 வரை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி, பத்திர பதிவு செய்துகொள்ளலாம் என கலெக்டர் ராஜராமன் தெரிவித்துள்ளார்.
source : Dinamalar |
|
|
|
|
|