|
கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துகிறது ஹூண்டாய் Dec 7, 11 |
|
டொயோட்டோ, ஜெனரல் மோட்டார்சை தொடர்ந்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு கார் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை காரணம் காட்டி டொயோட்டோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளன.
இதைத்தொடர்ந்து, நாட்டின் இரண்டாவது கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் மார்ர்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறுகையில்,"கார்களின் விலையை 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளோம். ஜனவரியில் விலை உயர்வு அமலுக்கு வரும்.
ஒவ்வொரு மாடலுக்கும் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து தற்போது ஆய்வு நடத்தி வருகிறோம். ரூபாய் மதிப்பு சரிவு காரணமாகவே விலை உயர்வை கையிலெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்," என்றார்.
Source:Thatstamil |
|
|
|
|
|