Nagaratharonline.com
 
திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு  Dec 9, 11
 
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் பக்தர்கள் தரிசனத்துக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.


இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு சுயம்புவாகத் தோன்றியதாக ஐதீகத்தில் கூறப்படும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டிருப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 3 நாள்களுக்கு மட்டும் கவசம் திறக்கப்படும்.
இதேபோல் வெள்ளிக்கிழமை பெüர்ணமியன்று மாலை கவசம் திறக்கப்படுகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு கவசத்தால் ஆதிபுரீஸ்வரர் மூடப்படுவார். 3 நாள்களும் புணுகு சாம்பிராணியால் தைல அபிஷேகம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.