|
சிவகங்கை நில மதிப்பு பல மடங்கு உயர்வு : ஒரு சதுர அடி ரூ. 1,000/- Dec 10, 11 |
|
இடம்,மனை போன்றவற்றை பத்திர பதிவு செய்ய புதிய கட்டணம் அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து அமலுக்கு வருகிறது.
புதிய வழிகாட்டி மதிப்பின்படி சிவகங்கையில் அதிக பட்சமாக வணிக கட்டடங்கள் உள்ள நேரு பஜாரில் ஒரு சதுர அடி ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2007 ஆக.,1ல் புதிய வழிகாட்டி மதிப்பை வெளியிட்ட அரசு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.இந்த காலத்தில் நிலம்,கட்டடங்களின் விலை பலமடங்கு உயர்ந்தது. கடந்த ஆண்டு புதிய வழிகாட்டி மதிப்பு தேர்தல் காரணமாக தாமதமானது
.
இதன்படி சிவகங்கையில் அதிக பட்சமாக நேரு பஜாரில் ஒரு சதுர அடி ஆயிரம் ரூபாய்,மேல ரத வீதியில் 200 ஆக இருந்தது 1000, மதுரை ரோடு 1000, ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய மதிப்பு குறித்த விபரம் தாசில்தார் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதால் பொதுமக்கள் நிலத்தின் மதிப்பு தெரியாமல் தவிக்கின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|