|
காரைக்குடி தென்சபரியில் விரதம் முடிக்கும் பக்தர்கள் Dec 12, 11 |
|
முல்லை பெரியாறு அணை பிரச்னையால், ஐயப்ப பக்தர்கள் காரைக்குடி தென்சபரி ஐயப்பன் கோயிலில் விரதம் முடிக்கின்றனர்.ச சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது கொசப்பட்டி. இங்கு, 18 படியுடன் கூடிய தென் சபரி ஐயப்பன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை பிரச்னையால், கேரள எல்லைக்குள் தமிழர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. தற்போது கொசப்பட்டி தென்சபரி ஐயப்பன் கோயிலுக்கு புதுக்கோட்டை, அறங்தாங்கி, பட்டுக்கோட்டை, திருமயம், காரைக்குடி, பேராவூரணியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் வருகின்றனர். அவர்கள் இருமுடியுடன் 18 படி ஏறி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேம் செய்து, விரத்தை முடிக்கின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|