Nagaratharonline.com
 
ஒரு லட்சம் மரக்கன்று நட முருகப்பா நிறுவனம் திட்டம்  Dec 12, 11
 
ஏஎம்எம் முருகப்பா செட்டியார் ஆராய்ச்சி மையத்தின் கிராம பசுமைத் திட்டத்தின் சார்பில் விழுப்புரம், சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 80 கிராமங்களில் 1 லட்சம் மரக்கன்று மற்றும் மருத்துவ மூலிகைச் செடிகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் கட்டமாக காரைக்குடி, சிவகங்கை பகுதிகளைச் சேர்ந்த 130 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் புவி வெப்பமடைவது தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கிராமங்கள் மூலமாக மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளதாக முருகப்பா நிறுவனத்தின் தலைவர் ஏ.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.


source : Dinamani