|
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் காரைக்குடி நூறடி ரோடு பள்ளம் Dec 19, 11 |
|
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் புதுவயல், கானாடுகாத்தான், பள்ளத்தூருக்கு ஏராளமான பஸ்கள் நூறடி ரோடு வழியாக சென்று வருகின்றன. இதனால், இந்த ரோடு எந்நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த ரோட்டில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. ரோட்டின் நடுவே ஆங்காங்கே உள்ள பெரிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
தெருவிளக்கு வசதியன்ற புது பஸ் ஸ்டாண்ட் - ரயில்வே ரோட்டில் அவதிப்படுகின்றனர். ஈ.வே.ரா., சிலை முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லும் நூறடி ரோட்டை செப்பனிட நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். ரோட்டில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, கால்வாய் வசதி ஏற்படுத்தவேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|