|
மேலைச்சிவபுரியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் Dec 20, 11 |
|
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் போக்கைக் கண்டித்தும், அந்த மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலைச்சிவபுரி நாடக மேடை அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்துக்கு மு. அண்ணாமலை தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் பழனியப்பா பெரியகருப்பா உண்ணாவிரதத்தைத் தொடக்கிவைத்தார்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ. கருப்பையா, ஊராட்சித் துணைத் தலைவர் ராஜ்குமார், ஏனாதி ராசு, நாகலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழர்களின் நலனைக் காக்கக் கோரி, தொடர் முழக்கமிட்டவாறு பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, வணிகர்கள் கடைகளை அடைத்திருந்தனர்.
source : Dinamani |
|
|
|
|
|