|
பொன்னமராவதியில் உண்ணாவிரதம் Dec 26, 11 |
|
பொன்னமராவதி, டிச. 25: பொன்னமராவதியில் விஸ்வகர்மா மகாஜன சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கும் கேரள அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அந்தச் சங்கத்தின் தலைவர் பழ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் ந. சேதுராமன், பொருளாளர் ந. சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி உறுப்பினர்கள் ரா. பராசக்தி, ரா. சுசிலா, வி. வெண்ணிலா, கால்நடை ஆய்வாளர் ஆர்.யூ. ராமன், நாகராஜன், ஜோதிடர் முருகேசன், நேதாஜி, மக்கள் தமிழகம் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன், ஆட்டோ சங்க நிர்வாகி முருகேசன், முத்து உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
சங்க நிர்வாகிகள் மு. பக்கிரி, அழ. கருப்பையா, க. செந்தில், ப. சந்திரா,கு. கணேசன்,சே. சுப்பிரமணியன், பூ. சுப்பிரமணியன், ம. மாணிக்கம், சே. பாஸ்கர், ச. ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, காந்தி சிலையிலிருந்து பேருந்துநிலையம் வரையில் தொடர் முழக்கமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர். |
|
|
|
|
|