Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் சொர்க்கவாசல் திறப்பு  Jan 3, 12
 
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை இரவு 9.30க்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பகல் பத்து உற்சவம் நடந்தது. தினமும் மாலை ஆழ்வார்கள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினர்.நாளை காலை 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் சவுமியநாராயணப்பெருமாள் சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இரவு 9 மணிக்கு ராஜாங்க சேவையை தொடர்ந்து 9.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் உபய நாச்சிமார்களுடன் சொர்க்கவாசல் எழுந்தருளுகிறார். பின்னர் தாயார் சன்னதியில் பூஜைகள் நடந்த பின்னர் ஆஸ்தானம் எழுவார். அடுத்து இராப்பத்து உற்சவம் துவங்குகிறது. அடுத்த 10 நாட்கள் ஆழ்வார்கள் தாயார் சன்னதியில் எழுந்தருளி பெருமாளை தரிசிப்பர்.தினசரி இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாகபெருமாள் பிரகாரம் வந்து பத்தி உலாத்துதல் நடைபெறும்.பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளுவார்.

source : Dinamalar