Nagaratharonline.com
 
நான்கு பேருக்காக நடந்த BSNL வாடிக்கையாளர் கூட்டம்  Jan 3, 12
 
காரைக்குடி BSNL சார்பில் நடந்த பிராட் பேன்ட்,மொபைல் வாடிக்கையாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பொது மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:
வள்ளியப்பன்,அமராவதிபுதூர்: BSNL மொபைலில் அடிக்கடி தேவையில்லாமல் மெசேஜ் வருகிறது. ஒவ்வொரு முறையும் ரூ.10 பிடித்தம் செய்யப்படுகிறது. இது என்ன நியாயம்?
துணை பொதுமேலாளர் முனியாண்டி : தனியார் மூலம் இந்த மெசேஜ் அனுப்பப்படுகிறது. 24 மணிநேரத்திற்குள் இது குறித்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில், மெசேஜ் உடனே நிறுத்த நடவடிக்கை எடுப்பதோடு, பிடித்தம் செய்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ராமசாமி, காரைக்குடி: சில மாதங்களுக்கு முன் எனது வீட்டருகே "கேபிள்' பதிப்பதற்காக குழி தோண்டி அரைகுறையாக மூடிச் சென்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. என்றார்.
நேற்று, நடந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு 4 வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். பி.எஸ்.என்.எல்.,அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். கூட்டம் எதற்காக நடத்தப்பட்டதோ, அது நிறைவேறாமல் போனது என வாடிக்கையாளர் புலம்பி சென்றதை பார்க்க முடிந்தது.

source : Dinamalar