Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம் சுற்றுலா  Jan 4, 12
 
 
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆந்திரா சுற்றுலாவில் 66 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

சென்னையிலிருந்து 23/12/2011 இரவு, Tamil Nadu Express மூலம் புறப்பட்டு விஜயவாடா சென்று கிருஷ்ணா நதியில் நீராடி சிறிய குன்றின் மீது உள்ள கனகதுர்கா ஆலயம் சென்று தரிசித்து, பிறகு மலை மீது உள்ள மங்களகிரி பானகால மூர்த்தியை வழிபட்டு இரவு ஸ்ரீசைலம் சென்று தங்கினர்.
மறுநாள் (25/12/2011) ஸ்ரீசைலம் மல்லிகர்ஜுநேஸ்வரர் சாமியை தரிசித்து " ஸ்ரீசைலம் வந்தோம்" என்பதற்கு அடையாளமாக சாட்சி கணபதியை வழிபட்டு அகோபிலம் லக்ஷ்மி நரசிம்மரை கும்பிட்டு இரவு மகாநந்தி வந்து சேர்ந்தனர்.

மறுநாள் (26/12/2011) மகாநந்தி தீர்த்தத்தில் அனைவரும் வெது வெதுப்பான தீர்த்தத்தில் ஆனந்தமாக நீராடி , சுயம்பு மகா நந்திஸ்வரை வழிபட்டு யாகண்டி வந்து, சற்று சிரமப்பட்டு செங்குத்தான படிகள் ஏறி கும்பிட்டு மந்திராலயம் வந்து தங்கினர்.
மந்திராலயம் ஆந்திரா மாநிலத்தில் கர்நாடகா எல்லை ஓரம் உள்ளது. துங்கபத்திரா நதிக்கு ஒரு கரை கர்நாடகா. மறுகரை ஆந்திரா, ( துங்கபத்திரா நதியில் தண்ணீர் இல்லாததால் குளிக்க இயலவில்லை) . ராகவேந்திரரை தரிசித்து கர்நாடகா பகுதியில் உள்ள பிருந்தாவன் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து பிறகு புறப்பட்டு 28/12/2011 அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார்கள் .

(மந்திராலயத்தில் வேஷ்டி கட்டிக்கொண்டு போனால் ராகவேந்திரரை அருகில் தரிசிக்கலாம் . பேன்ட் மற்றும் பைஜாமா அணிந்தவர்கள் சற்று தள்ளி தரிசிக்க முடியும்).

ஆந்திராவில் சுற்றுலா ஏற்பாடுகளை, வேகுப்பட்டி திரு முத்துபழநியப்பன் அவர்கள் தொண்டு உள்ளத்துடன் செய்து கொடுத்தார்கள் . கொத்தமங்கலம் திரு வெங்கிடாசலம் அவர்கள் ஆந்திரா சுற்றுலாவில் போது கூடவே வந்து செய்த உதவிகள் ஏராளம் . அவர்களுக்கு நன்றிகள் பல .

editor, nagarathargateway.com